ஆல்பெர் காம்யுவின் நூற்றாண்டை ( 1913 - 2013 ) ஒட்டி தமிழ்மொழி சமர்ப்பிக்கும் அஞ்சலி இது.
கட்டுரைகள், நேர்முகங்கள் மற்றும் கதை வாயிலாக காம்யுவின் பரிமாணங்களை அறிமுகப்படுத்துகிறது.
காம்யுவுக்கும் சார்த்தருக்கும் இடையிலான முரண்பாடு விவாதிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான
காம்யுவின் ஆவணத்தைத் தமிழில் தந்து, இன்றைக்குக் காம்யுவைப் பேசுவதற்கான நியாயத்தை முன்வைக்கிறது.