‘எதையும் பழகிய தடத்தில் சொல்லும் வழக்கமற்றவர் சீனிவாசன்’. ஓர் அபிப்ராயத்தை உருவாக்கி வெளிப்படுத்தும்போது இன்னும் கொஞ்சம் முயன்றால் இதைக் கோட்டுபாட்டுத்தளத்திற்கு நகர்த்திவிடலாமே என எனக்குத் தோன்றுவதுண்டு. அவரைப் பொறுத்தவரைக்கும் எல்லாவற்றுக்கும் ஆவண மதிப்பு உண்டு. ஆகவே எதையும் பதிவாக்குவதும் பாதுகாத்து வைப்பதும் அவர் இயல்பு. அவ்வாறு தமது சொந்த அபிப்ராயங்களைப் பதிவாக்கி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொன்றும் மிகக்குறைந்த சொற்களால் எழுதப்பட்டுள்ளன. ‘சிறியதன் அழகு’ நிரம்பியவை. விமர்சனக் கட்டுரைகள் அருகிவரும் இன்றைய சூழலில் சீனிவாசன் நடராஜனின் இக்கட்டுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
- பெருமாள் முருகன்