பள்ளியில் படித்த போதே பேச்சாளனாக,கவிஞனாக,சிந்தனையாளனாக இருந்து 200க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியவர்.இவரின் திறமையை பாராட்டும் விதமாக பல விருதுகள் இவருக்கு சிறப்பு சேர்த்தது.சிறந்த சமூக சிந்தனையாளராக விளங்கும் இவர்,பொறியியல்ல் படிக்கும் போதும் தமிழார்வம் குன்றாமல் பல நூல்களைப் படித்து தன்னை உயர்த்திக் கொண்டவர்.கல்லூரியில் கலாமைப்பற்றி காணொலித் தொகுப்பைத் தயாரித்து பாராட்டைப் பெற்றவர்.கலாமின் பல நூல்களை ஆய்ந்து 56 தலைப்புகளில் வைர மாலையாக்கி பல அழகிய படங்களுடன் சிறப்பாக இந்நூலை செய்கிறார் விக்னேஷ்வரன்....