மரத்தையும் தன் குடும்ப உறுப்பினராகக் கருதும் சிந்தனை மரபு நமக்கு உண்டு.காலங் காலமாக நாம் கூடித்தான் வாழ்ந்தோம்.பிறப்பினால் பேதங்கள் கண்டபோது நமது அரசுகள் வீழ்ந்தன.பொருளாதாரத்துக்காக இயற்கையுடனும் உறவுகளுடனும் முரண்பட்டபோது,நமது ஊர்களை விட்டு வெளியேறும் எஇலை உருவானது.நவீன நாகரிகம் எனும் மாய வலையின் ஒவ்வொரு கண்ணியும் நமது மதிப்பீடுகளுடன் முரண்படுகின்றன.