பவுடர் பூசவைத்து, தலையைத் திருத்தச் சொல்லி, பத்து நிமிடம் வேலை வாங்கிவிட்டு, படத்தை மட்டும் ஒரே நொடியில் எடுத்துவிட்டான். நீலப் படுதாவின்முன் நிற்கவைத்து, காமிராவின் கருப்பு மூடியைக் கழற்றி மாட்டினான். அதன்பிறகும் சிலைகளைப்போல புன்னகைத்து நின்றிருந்த பெண்களைப் பார்த்து, “அவ்வளவுதான்!” என்று சொன்னான்.
ருவருக்கும் ஏமாற்றமாய் இருந்தது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு, “படத்தைக் கொடுளிணியா!” என்றனர்.
திருவிழாவை சுத்திப் பாத்துட்டு அப்புறமா வாங்க, கழுவித் தாரேன்.”
நாங்க உஷீமீளூர்தான். வீட்லயே போளிணிக் கழுவிக்கறோம்... நீ இப்பவே குடு!”
ுளியும் தேங்காளிணி மஞ்சியும் கொண்டு காலம்காலமாகப் பாத்திரம் துலக்கிய, ரேகை மங்கிய கைகளோடு அந்தப் பெண்கள் திடமாகப் பேசினார்கள். போட்டோகிராபரோ, படம் கழுவுவது என்பது பாத்திரம் கழுவுவதுபோன்ற விவகாரமல்ல என்று விளக்கினான். முக்கியமாக, பாத்திரங்கள் வெளிச்சத்தில் கழுவப்படுகின்றன என்றும் படங்கள் இருட்டில் கழுவப்படுகின்றன என்றும் வித்தியாசத்தைத் தெரிவித்தான்.
- கிருஷ்ணவேணியும், சரசுவும் போட்டோ எடுத்த காதை