எல்லா உணவிகளிலும் காரத்துக்கு மிளுகு மட்டுமே பயன்படுத்தலாம். மணத்தக்காளி வற்றல் , மிளகு போட்ட தூதுவளை ரசம், மிளகுத் தூள் தூவிய நாட்டுக்
கோழிக் குழம்பு... இவற்றை அடிக்கடி ருசிக்கலாம் . காலை இஞ்சி, மதியம் சுக்கு, மாலை கடுக்காய் அருந்த நோய் வராது என்பது வாக்கு. காலையில் இஞ்சி
தேனூறலையும், மதியம் சுடு சாதத்தில் இரண்டு சிட்டிகை அளவு சுக்குத் தூளும், மாலை பிஞ்சு கடுக்காய்த் தூள் ஒரு தேக்கரண்டி அளவும் சாப்பிட்டு வாருங்கள்.
தேநீரில், அன்னாசிப் பூவும் துளசி இலையும் போட்டு அருந்தலாம். அன்னாசிப் பூவில் இருந்து எடுத்த அமிலத்தில் இருந்துதான் வைரஸ் காய்ச்சலுக்கு
காப்புரிமையுடன் மருந்து விற்கப்படுகிறது.
நவீனம் ஏறக்குறைய மற்ந்தேபோய்விட்ட உணவு. வேப்பம் பூ ரசம். வேப்பம் பூவை சேகரித்து நிழலில் உலர்த்திக் காயவைத்துக் கொள்ளுங்கள். ( நாட்டு மருந்துக்
கடை, அப்பளம், வடகம் விற்கும் கடைகளில் வேப்பம் பூ கிடைக்கும்) சாதாரணமாக ரசப் பொடிக்குப் போடும் , இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி , சீரகம் இவற்றுடன்
கூடுதலாக இந்த வேப்பம் பூவையும் சேர்த்து ரசம் வைத்து கோடையில் வாரம் மூன்று நாள் சாப்பிட்டால் அம்மை நம்மை அணுகாது.