ஈழத் தமிழினத்தின் இன்றைய இலக்கியப்பயணம் என்பது கற்பனைகளில் மை ஊற்றி எழுதுகிற எழுத்துக்களல்ல. இவை குருதியின் ஈரத்திலும்
கண்ணீரின் நிரப்பிலிலுமே இவ்வாக்கியங்கள் படைக்கபடுகின்றன. வாசிக்கும் போது இனிக்காது, சுவாசித்துப்பார்த்தால் பிணவாடை வீசும்.
கற்பனைகளை இரசிக்கவும் பூக்களின் வாசனையை முகரவும் விரும்பும் வாசகர்களுக்கு எங்களுடைய இலக்கியங்களை சுவைக்க முடியாது,
இருப்பினும் முட்களின் மேல் பட்டுத் துணியை விரித்து வைத்து பயணத்தைத் தொடர்கிறேன்.