வர்ளக் கெட்டு
கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம்.
கடலின் தன்மை மீனவனிடம் படிந்து கிடக்கிறது. மீனின் உத்திகளை வென்று, அதை கொன்றெடுப்பதில் உள்ளது அவனது இருத்தல். எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற இனம் புரியா நிர்பந்தம் அவன் தோள்களில் ஊட்கார்ந்திருப்பதான வாழ்க்கை என்கிறது வறீதையாவின் பதிவு.
கடலோடு உறவு கொள்ள, கடலோ வாழ்வைப் புரிந்துகொள்ள மகத்தான வாய்ப்பினை முன்வைத்துள்ளன இக்கதைகள்.