துளு நாட்டு வரலாறு
மயிலை சீனி.வேங்கடசாமி
துளுநாடு என்றும் கொங்கண நாடு என்றும் சங்க காலத்துத் தமிழ இலக்கியங்களில் கூறப்படுகிற நாடு, அக்காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைந்திருந்தது. இன்றைய கேரள நாடாகிய பழைய சேர நாட்டுக்கு வடக்கே தென் கன்னட மாவட்டம் என்னும் பெயருடன் இருப்பதுதான் பழைய துளு நாடு. சங்கச் செய்யுள்களில் சிதறிக்கிடக்கிற வரலாற்றுத் துணுக்குகளைத் திரட்டித் தொகுத்து எழுதப்பட்டது தான் இச்சிறுநூல்.