காட்டாற்று வெள்ளத்தில் கண்டபடி சிக்கித்தவிக்கும் மனித வாழ்வெனும் படகு சட்டென தன்னையே நதியாகவும் மலையாகவும் காற்றாகவும்
ஆகாய வெளியாகவும் உணரும் தருணத்தை இப்பயணத்தில் உணர்ந்தேன். இமயமலையின் பனிசிகரங்களின் குளிரில் உடல் சுருங்கி உள்ளம்
விரிவுகொள்ளும் போது என் மனம் கொண்ட நிலை அது. நாம் சுமந்த உடலும் அகமும் வேறல்ல இரண்டும் ஒன்றென உணரும் தருணம்.
நான் பெற்ற இந்த நிலையை இத்தொடர் மூலம் நீங்களும் பெற்ப்போகிறீர்கள்.
என்னுடன் ஓடத்தயாரா?
இதோ இன்னும் பத்து நிமிடத்தில் டெல்லிக்கு செல்லும் கிராண்ட் ட்ராங்க் ரயில் புறப்பட போகிறது. டெல்லியிலிருந்துதான் ஹரித்துவார் வழியாக
இமயமலைக்கு போக முடியும். ஆனால் ஒரு கண்டிஷன் என்னுடன் வருவதாக இருந்தால் வெறும் கையும் காலும் மட்டும் பத்தாது. உடன் பெரிய
பையில் நான்கு செட் துணிமணிகள் உடன் கையுறை, காலுறை, ஸ்வெட்டர், ஜெர்கின், மலையேறும் ஈரம் புகாத ஷூக்கள், குரங்கு குல்லாய் என்னும்
மங்கி கேப், கூலர்ஸ், குளிரை கட்டுப்படுத்தும் தெர்மல் உள்ளாடைகள்.