” மார்கழி மாதம் மனதை
மயக்கும் மாதம். இதமான பனி
காற்று மண்டலம் முழுதும் பரவி
உடலில் உத்வேகத்தையும்
உள்ளத்தில்
புத்துணர்ச்சியையும் அள்ளித்
தெளிக்கும் இனிய பருவம். “
” நீராடுவது என்பது சிலருக்கு
மட்டுமே கைகூடுகிற பயிற்சி.
சிலர் உடல் கழுவுகிறார்கள்
சிலர் தெளிக்கிறார்கள்,
சிலர் மட்டுமெ குளிக்கிறார்கள்.
அவர்களின் உடலில் விழும்
ஒவ்வொரு துளி நீரும்
மஞ்சன் நீராய் மகிழ்விக்கின்றது”
“ மார்கழித் திங்களை ஆன்மீக
வரவேற்பாக எதிர்கொள்ளுகிறபோது
நாள் முழுதும் பேரின்பப் பெருவிழா விளைகிறது.
நம் கண்களில் தெரிகிற காட்சிகளில்
எல்லாம் தெய்வீகம் தெரிகிறது”.