திரெளபதி
இந்திய மொழிகளின் ஆதார நாவல் இலக்கியமான மகாபாரதம் மீள்பார்வையாக இங்கு பெண்ணிய நோக்கில் விவரிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு ஏற்கெனவே அறிமுகமான மகாபாரதக் கதைமாந்தர்கள் புதிய கோணத்தில் விமர்சிக்கப்படுகிறார்கள் ஒரு பெண் மையமாக இருந்து மகாபாரதக் கதையை இயக்கி நட்த்துவதாக அமைந்த இலக்கிய போக்கு எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கவல்லது 2010 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இந்தத் தெழுங்கு நாவலில் லட்சுமிபிரசாத் கையாண்டிருக்கும் கதை சொல்லும் முறையும் வர்ணனைகளின் துணைக்களமும் வாசகர்களை மிகவும் முனைப் புடன் படிக்கச் செய்வதாக உள்ளன. அங்கங்கே ஒரு குலுக்கு குலுக்கிச் சிந்திக்க்க் செய்வதாகவும் உள்ளன. புராணம் சார்ந்த நாவல்-களில் தனித்த இடம் பெறத்தக்க சுவையான நாவல் இது.