நமது திணையியல் கோட்பாடு போல திட்டவட்ட மானதாக, இன்றைய நவீன அறிவியல் பகுப்பு முறை களுடன் பொருந்திப் போவதாக இல்லை என்பதே திணை யியல் கோட்பாட்டின் சிறப்பு என்கிறார் அவர். அது மட்டுமின்றி ஒவ்வொரு திணையையும் சுட்ட ஒரு மலரின் பெயரைத் தந்தது, ஒவ்வொரு திணைக்கும் முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்றவற்றை வகுத்து. அளித்து, பண்பாட்டு வாழ்வுடன் பிணைப்பை உருவாக்கி இருந்தது போன்றவை திணையியலின் மற்ற சிறப்புகள். அது மட்டுமில்லாமல், சூழலியல் சிதைவு பற்றியும் முதன் முதலில் எடுத்துக்காட்டியதும் திணைக் கோட்பாடு தான். இந்த கோட்பாட்டின் பின்னணியில் இருக் கும் - சிந்தனை முறைமையை, அது முன்வைக்கும் அறத்தை. நமது சமூகத்துடன் இந்த கோட்பாடு கொண்டுள்ள உறவு முறைமையை எளிதாகவும், சிறப்பாகவும் விளக்குகிறது இந்த சிறு நூல்.