நவீனத் தமிழ்ச் சூழலில் இசையைப் போலக் கவிதையுடன் இவ்வளவு அபாயகரமாக விளையாடுபவர்கள் அதிகமில்லை . கூர்வாளை வீசி விளையாடும் கோமாளியைப்போல கவிதையாட்டம் போடுகிறார். அந்த ஆட்டத்தில் புனிதங்கள் கலைகின்றன. விழுமியங்கள் சிதறுகின்றன. வாழ்வின் தருணங்கள் ஏளனப் புன்னகையுடன் நையாண்டிச் சிரிப்புடன் வெளிப்படுகின்றன. ஆபத்தான இந்த ஆட்டத்தை தார்மீகக் கோபத்துடனும் அறச் செருக்குடனும் , வெளிப்படுத்துகின்றன இசையின் கவிதைகள். nbsp;
No product review yet. Be the first to review this product.