புதையல் ரகசியம் :
நாகரிகத்தின் தொட்டில் என்று உலகில் அடையாளப்படுத்தப்படும் நாடுகளில் ஒன்று எகிப்து.
இந்த நாட்டின் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின் ஓர் அங்கத்தை சுவாரசியமாகப் படம் பிடித்துக் காட்டும் “புதையல் ரகசியம்” என்ற இந்த நூல். ‘தினத்தந்தி’ ஞாயிறு மலரில் தொடராக வெளியானபோதே வாசகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.
தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை துணைக் கண்காணிப்பாளர் முனைவர் சீ. வசந்தி அவர்கள் இந்த நூலைப் பற்றி குறிப்பிடும் போது, “பக்கத்திற்குப் பக்கம் வியப்பின் எல்லைக்கே நம்மை அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறவேண்டும்... இந்நூல் ஒவ்வொரு வீட்டு நூலகத்திலும் இருக்க வேண்டிய வரலாற்றுப் புதையல்” என்று பாராட்டியுள்ளார்.