பேசும் படம் :
கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்
ஒரு நல்ல திரைப்படம், முடிந்தவுடன் தொடங்குகிறது. விதவிதமான படிமங்களாலும் எண்ணங்களாலும் அடுக்கடுக்காக மலர்ந்து நவில் தோறும் புதுப்புது வெளிகளைத் திறந்துகொண்டே இருக்கிறது. ஒரு திரைப்படம் கண்முன் நிகழ்கிற ஒரு காட்சியாக இல்லாமல் கனவாக மாறுகிறது. நீர்ப்பரப்பில் விழும் கூழாங்கல் நனைந்து அமிழ்வதைப் போலத் திறைச்சட்டத்தின் உள்ளே நாம் அறியாமல் அமிழ்கிறொம், திரைப்படம் நம்மைச் சுற்றி, நாம் இருக்கின்ற, சமயங்களில் நாம் இல்லாத ஒரு கனவாக நிகழ்கிறது. ஒரு பார்வையாளராக உண்ர்வுரீதியாக நாம் அடைகிற அந்த அனுபவம் தன்னிச்சையாக நிகழ்வதில்லை