அகிலனின் பாவை விளக்கு இந்த நூற்றாண்டுத் தமிழின் தலைசிறந்த உரைநடைக் காவியம் என்று இலக்கியத் திறனாய்வாளர் பலரால் பாராட்டப்பெறும் புதினம் இது.
1957-58இல் முதன்முதலாக இது ‘கல்வி’ வார இதழில் ஆசிரியர் திரு.சதாசிவம் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்நாவலின் சுருக்கம் ஹிந்தியில் ‘நவநீத்’ என்ற இலக்கிய இதழிலும், கன்னடத்தில் ‘கர்மவிர்’ பத்திரிக்கையிலும் இந்நாவல் தொடராக வெளியிடப்பட்டுள்ளது.