பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்
தமிழர்களின் ஆதிநூல் தொகுதிகளான பாட்டும் தொகையும், அவற்றை ஆய்வுக்குட்படுத்தி பொதுவிதிகளை வகுத்திட்ட தொல்காப்பியமும் காலந்தோறும் பலவேறு அரசியல்களின் நோக்கு நிலைகளில் பலவிதமாகப் பொருள்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அவற்றுள் சநாதனம், சாதியம், சமயம், திராவிடம், வரலாற்றுப் பொருள் முதலியம் ஆகியன குறிப்பிடத்தக்கன. இவற்றின் கருத்தியல் செலாவணித் தன்மை மாறிக்கொண்டிருக்கிற இன்றைய வரலாற்றின் மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஓரப்பகுதித் தமிழ் மக்களின் பார்வையில் பாட்டு, தொகை, தொல்காப்பியம் ஆகிய பனுவல்களை மறுபரிசீலனை செய்கின்ற அரசியல் செயல்பாட்டின் ஒரு முயற்சியாக இந்நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது.