இஸ்லாமியர்கள், தலித் மக்களுக்கெதிரான வன்மத்தைத் தூண்டி அரசியல் ஆதாயங்களுக்காகவும், வரலாற்றைத் திரிப்பதற்காகவும்
இந்துக்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும் இந்துத்துவ ஃபாசிச சக்திகள் பரப்பி வருகின்ற பிரச்சாரங்கள் எந்தவொரு ஆதாரமும்
இல்லாதவை என்பதை வரலாற்றின் துணைகொண்டு விளக்குகின்றது. மேலும் நிகழ்கால அரசியல் சூழலில், மதவெறி சக்திகளிடம்
இரையாகிவிடாமல் விழிப்புடன் இருப்பது எப்படி என்று நமக்குக் கற்றுத்தருகிறது இந்நூல்.