நாவலின் பெரிய பலம் வட்டார மொழிநடைதான். எனுமா எழுதியிருக்காரு என சொல்லத் தோன்றுகிறது. சலிப்பையும், எரிச்சலையும் கூட மெல்லிய நகைச்சுவையோடு வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் சில இடங்களில் வெடிச் சிரிப்பையும் வரவழைக்கிறார்கள். நட்பு, காதல், காமம் என கலவையான உணர்வுகளை சரியான விகிதத்தில் குழைத்து நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார் கண்மணி குணசேகரன்.