அறிந்தோ அறியாமலோ திரை இசைதான் தமிழர்களின் குருதிநாளங்களில் ஓடுகிறது. சமகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் எல்லா விமரிசைகளுக்கும் சினிமாப் பாடல்களே வடிகால். அந்த வடிகாலில் இசைப் பெருக்கைத் திறந்துவிடும் இசை அமைப்பாளர். பாடலாசிரியர், பாடகர்கள், இசைக் கலைஞர்கள் என்று திரையுலகில் செயல்படுபவர்கள் அநேகம். அவர்களைப் பற்றி திரை இசை ரசிகனுக்கு ஒரளவாவது தெரியும். அவர்கள் உலகின் தோற்றங்கள் தெரியும்.
அவர்களை அடியொற்றி அதே தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் கலைட்திறனுடனும் செயலாற்றும் சமாந்திர உலகௌம் இருக்கிறது. இசைக் குழுவினரின் உலகம். நகசிலைக் கலைஞர்களின் உலகம். அறிந்தும் அறியப்படாத அந்த நகல் உலகின் இயல்பைச் சொல்கிறது இந்நூல். வெறும் தகவல் திரட்டாகவோ ஆவணத் தொகுப்பாகவே அல்லாமல் சிரிப்பும் கண்ணீரும் வலியம் கொண்டாட்டமும் நிறைந்த உயிரோட்டமான நடையில் சொல்கிறது.