நவீனத் தமிழ்ச் சிறுகதையில் மெளனி ஒரு தனிநபர் இயக்கம் அவர் கதைகளில் சொல் புதிது: அவர் சமைத்த உலகமும் புதிது
மெளனியின் எழுத்துகளுக்கு முன்னோடியும் வாரிசும் அவர் மட்டுமே இந்தத் தன்மையை இனங்கண்டு தான் அவரை சிறுகதையில் திருமூலர் எனப் புதுமைப்பித்தன் வியந்தார்
தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித இனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்த போது மெளனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார் மனத்தின் இருள் விநோதம் தத்தளிப்பு குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள் தான் மெளனியின் பெரும்பான்மையான கதைகளும்
சுருங்க எழுதி பெரும் புகழ் பெற்றவர் மெளனி அவர் மொத்தம் எழுதியவை 24கதைகள் 2கட்டுரைகள் மெளனியின் மொத்த ஆக்கங்களையும் உள்ளடக்கியது இந்நூல்..