என்.ஸ்ரீராமின் கதைகள் வெறும் கதைகளல்ல, வாழ்வின் அசலான ஊடுபாவு நிரம்பிய கதைகள். இவர் கதைகளில் உயிர் பெறும் நிலம் தன்னைத் தானே சூடிக் கொள்ளும் ஒரு பேரழகி. மற்ற பஞ்சபூதங்களும் மற்றும் பறவைகளும், மிருகங்களும் அதன் ஆபரணங்கள். உண்மையில் நம் வாழ்வு என்பது இயற்கை நிகழ்த்திக் காட்டும் ஒரு எளிய தற்செயல். நாமெல்லாம் வெறும் கருவிகள். அதன் சாட்சியங்களே இந்த கதைகள்.