எந்தக் கவிஞனும் ‘ நான் ‘ நானல்ல. ஆனால் அவனுடைய ‘ நானும் ‘ அதில் ஒளிர்ந்து இருண்டும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இந்தக் கவிஞனுடைய ‘ நான் ‘ கபடமற்றது. இல்லாத வெளிச்சத்தைத் தன்மீது பரப்பிக் கொள்வதுமில்லை; இருக்கின்ற பெருமிதத்தை அடக்கம் கருதி மறைத்துக்கொள்வதுமில்லை. - அபி