ஒருமுறை பஸ்சில் பயணம் செய்யும்போது ஒரு பெண் தன்னிடமிருந்த ஆரஞ்சை எடுத்து அதன் சுளையை தன் சுத்தமான கர்சிப்பில் வைத்துச் சுற்றி
அதன் கூர்முனையை தன் 7 மாத கைக்குழந்தைக்கு கொடுத்தாள். குழந்தை தாய்ப்பால் அருந்துவது போல், பழச்சாற்றை துணியில் சப்பி சாப்பிட்டது.
தாகமும் தணித்து, ஊட்டமும் தரும் அந்த தாயின் வித்தை ஒரு கவிதை போல் மனதில் இன்னமும் இருக்கிறது. இப்போது நமது தேவையெல்லம் உணவு
அறிவு என்பது இனிவரும் நாட்களில் அத்தியாவசியமானது. எந்த உணவை எப்போது எப்படி எதனுடன் சமைத்து சாப்பிடலாம் என்கிற அடிப்படை உணவு
அறிவும் விழிப்புணார்வும்தான் நம்மை நல்வாழ்வை நோக்கி நகர்த்தும். இந்நூல் அதற்கான அடிப்படையை ஏற்படுத்தி தருகிறது.