பெண்களின் மாதவிடாய்,அவர்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைகள்,பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரும் இன்னமும் வழங்கப்படாத பெண்களுக்கான இடஒதுக்கீடு,வீட்டுப்பணி செய்யும் பெண்களின் நிலை மற்றும் அதற்கான சட்டங்கள் என பெண்களின் பல்வகையான பிரச்சனைகளைப் பேசும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் படிக்க வேண்டியவை.இதைத் தவிர சமூக அக்கறையோடு எழுதப்பட்டுள்ள விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றிய கட்டுரையும் சென்னையின் பெரு மழை வெள்ளத்தில் புத்தகங்கள் அழிந்ததையும் அவற்றுக்கு அரசு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் யாவும் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை வருங்காலத் தலைமுறை அறிந்து கொள்ள நிச்சயம் உதவும்.