ஒரு காலத்தில், சிறுகதை தனது வடிவத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தது. பிரெஞ்சா, ருஷ்யாவா, அமெரிக்காவா, இங்கிலாந்தா.. என்று பரிதவித்தது.
வந்து வந்து.. முத்து முத்தா வந்து விழுந்தது.. தமிழ், மலையாளம், மராட்டியம், வங்கம், இந்தி என்று சேகரித்து மடியில் கட்டி முடியலை.
சினையாகி சினையாகி, பலரகக் குட்டிகள் ஈன்றன! ஒருகட்டத்தில் போதும் என்று தோன்றவே, ரகங்கள் பலவிதமாகி, வடிவங்கள் உடைந்து விதவிதமாகிவிட்டன.
மேலும் மேலும் உடைந்து, குழந்தைகள் வரைந்த படங்கள் ஆகிவிட்டன. இனி சிறுகதை வடிவங்கள், தோன்றிய இடங்களான வாய்மொழிக் கதைகள் போலவே ஆகலாம்.
கி. ராஜநாராயணன்
No product review yet. Be the first to review this product.