IT துறை இண்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி
வருங்காலத் தொழில்நுட்பம் ஜ.டிதான். அதைப் புறக்கணித்து விட்டு எந்தத் துறையும் இயங்க முடியாது. அதனால் தான் வெறுமனே கம்பியூட்டர் சயின்ஸ், ஜ.டி. படித்தவர்களை மட்டுமே ஜ.டி. நிறுவனங்கள் பணிக்கு எடுப்பதில்லை இதர எஞ்சினியரிங் பட்ட்தாரிகளில் ஆரம்பித்து கலைக் கல்லூரிகளில் படிப்பவர்கள் வரை அனைவருக்கும் அந்த வாசல் திறந்திருக்கிறது. ஏதோ ஒருவிண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்து. தெர்வு எழுதி, அதில் அதிகபட்ச மார்க் வாங்கி இந்த வேலையை வசப்படுத்திவிட முடியாது. இதற்கான தேர்வு முறை விழிகாட்டிப் பாதை இல்லாத வழி போல பலரை குழம்பச் செய்கிறது. எழுத்துத்தேர்வு , குழு விவாதம், டெக்கினிக்கல் தேர்வு, எச்.ஆர் இண்டர்வியூ என பல தேர்வுகளை அடுத்தடுத்து எதிகொள்ள வேண்டியிருக்கும் படிப்பு திறமை, தங்கள் பாட்த்தில் இருக்கும் புலமை ஆகியவற்றைத் தாண்டி வேறு சில விஷயங்கள் இருப்பவர்களே இதில் ஜெயிக்க முடிகிறது, அவை எந்தப் பாடப் புத்தகங்களிலும்கிடைப்பதில்லை என்பதால் அனுபவத்தின் வழியாகவே தெரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை நிபுணர் ஒருவர் கொடுத்தால் இன்னும் சுலபம் அல்லவா? அப்படி வந்திப்பதே இந்த நூல் இதைப் படித்து இதன்படி நடக்கும் இளைஞர்களுக்கு எதிர்காலத்தின் வாசல் அகலத் திறந்திருக்கிறது.