நன்மை மற்றும் தீமை என்ற எதிரிணை மூலம் புவியில் மனித இருப்பு குறித்து நவீன மனிதன் என்ற கருத்தியலைப் புனைகதைகளில் ஜீ.முருகன் உருவாக்கியுள்ளார். யதார்த்தக் கதைகள் உன்னதமானவை என்ற பின்காலனிய அரசியலை அறிந்திட்ட இஅவர், மரபான கதசொல்லல் மூலம், நவீனச் செவ்வியல் கதைப்பிரதியை படைத்துள்ளார். நுகர்பொருள் பண்பாட்டில் சிக்கியுள்ள நவீன வாழ்க்கைப் பரப்பில், நெருக்கடியையும் வதைகளையும் எதிர்கொண்டிருக்கிற மனிதர்கள் குறித்து இவர் புனைந்திருக்கிற பகடியில் கருப்பு நகைச்சுவை பொதிந்திருக்கிறது. குடும்ப அமைப்பு சிதலமாகி, எல்லோரும் ஆளுக்கொரு ஸ்மார்ட்போன் மூலம் வெற்றுக் கேளிக்கைக்குள் மூழ்கியுள்ள சூழலில், முருகனின் புனைகதைகள், சமகால வாழ்க்கையை விசாரணைக்குள்ளாக்குகின்றன.
No product review yet. Be the first to review this product.