நிலநடுக்கம், சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011 ஆம் ஆண்டில் ஜப்பான் சந்துத்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சாட்சியான மிக்காயேல் ஃபெரியே,தன் அனுபவங்களையும்,அங்கு திரட்டிய தரவுகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் நூல் இது.மூன்று பகுதிகளாகப் பிரிந்து விரியும் இந்த நூலின் ஆசிரியர் அரடியலும் அழகியலும் இணைந்து அசாத்தியத் துணிவுடன் விவரிக்கிறார்.
இயற்கை பேரிடர்களையும் மனிதர்களே தருவித்துக்கொள்ளும் பேராபத்துக்களையும் சமூகக் கடமையோடும் இலக்கிய ரசனையோடும் அணுகும் பனுவல் இது.