பன்மலர்ச் சோலை :
தனது பாதை – பயணம் –பயன்பாடு – படிகட்டு என எல்லாத் தளத்திலும் ஒரு ராஜாளிக்குரிய உயரத்தோடும் ஒரு போராளிக்குரிய கவனத்தோடும் அடியெடுத்துச் சென்றிருக்கிறார் நீதியரசர் லெட்சுமணன் அவர்கள்
கல்வி – கம்பன் – நீதித்தீர்ப்பு – இலக்கியப் பார்வை சமூகச் சிந்தனை எனப் பல்வேறு தளங்களில் பதிவு செய்தவற்றை அடுத்தடுத்த தலைமுறைகள் அறிந்து கொள்ள இது ஓர் ஆன்ந்தமான ஆவணம்.
70 ஆண்டுகாலப் பயணத்தின் பல்வேறு பதிவுகள் எப்போதோ அல்ல.
எப்பொழுதும் நம் நினைவுகளை ஈரப்படுத்தும்.
இந்தப் பன்மலர்ச் சோலை நதியில் நனைந்திருக்கிறது நீதியில் இணைந்திருக்கிறது.