பாலுமகேந்திராவின் நினைவுகள்:
சினிமா விஞ்ஞானம் தந்த கலை: நடனம், நாட்டியம், இசை, ஒலி, ஒப்பனை போன்ற பல கலைகளை உள்ளடகியது.
இந்தியாவில், சிறப்பாக தமிழ் நாட்டில் சினிமா மேடை நாடகத்திலிருந்து பிறந்தது. வளர்க்கப்பட்ட்து என்பர்.
சினிமா ஒரு தனி மொழி என பூனா திரைப்படக் கல்லூரியில் கற்ப்பிக்கப்பட்டது, அத்தனி மொழியை கற்றவரில் ஒருவர் பாலுமகேந்திரா. இந்தியா சினிமா மேம்பாட்டுக்கு உழைத்தவர். அன்னாரின் பங்களிப்பை இச்சிறுநூல் ஆராயும்.
இந்திய சினிமாக் கலை வளர்சிச்சியில் பாலுமகேந்திரவின் பங்களிப்பு என்றும் நிலைத்து நிற்க்கும் என்பதையும் இந்நினைவுகள் நூல் கூறும்.
சினிமா கலையும் தீச்சுவாலை போன்றது;அது நுகர்வதிலிருந்து பிறக்கிறது என்ற பிரெஞ்சு டைரக்டர் கூற்றையும் பாலுமகேந்திரா எற்றவர்.