தஞ்சை மாவட்டத்தில் பிறந்து தற்போது நெய்வேலியில் வசித்து வரும் நெய்வேலி பாரதிக்குமார் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் துணை முதன்மைப் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.சிறுகதை,கவிதை,கட்டுரை,பிறமொழித் திரைப்பட விமர்சனங்கள் என எழுத்தின் பல்வேறு பரிமாணங்களில் இயங்கியுள்ளார்.இவர் வசனம் எழுதிய “மன்னார் வளைகுடா” திரைப்படமும் அடங்கும்.ஒரு ஆவணப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“அறிவை விரிவு செய்,அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கும் மக்களை...”
என்கிற பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப,நாளும் புதிய செய்திகளை தேடித் திளைப்பவர்களுக்கும்,வரலாற்றின் மீது தீராத தாகம் கொண்டவர்களுக்கும் இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.