இருத்தலின் ஆதாரங்களில் ஒன்றான் காதலை இச்சமூகம் பெரும் கசப்புடனே எதிர்கொள்கிறது.வகுத்து வைக்கப்பட்ட வாழ்க்கைச் சட்டகத்தினை உதறித் தள்ளும் விடுதலை நடவடிக்கைகளை அது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.அதனை உதறிவிட்டு நகர்பவர்களிடம் கோர முகத்தை காட்டுகிறது.தீராத அதன் வன்மத்தின் விளைவாக தன் காதலியை இழக்கிறான் ஒருவன்.அடையாள அகங்காரம் கொண்ட சமூகத்தின் மீது காட்டம் கொள்ளும் அவனின் எதிர்வினையே இக்கவிதைகள்..