அக்கா கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
கன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாணர்கள் யார் யார் என எந்த முந்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசித்தால் நினைவுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருகிறார்கள்.
இந்த பத்துக் கதைகளின் மூலம் கட்டமைக்கக் கூடியது சுயபச்சாதாபமற்ற, ‘பெருமித’ வாழ்க்கையை நம்பும், சுய அடையாளத்தைத் தேடும், இயலாமையிலும் உதட்டைக் கடித்து அழுகையை விழுங்கித் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் பெண்ணின் உலகமாக இருக்கிறது. இந்தப் பெண், சமூக அமைப்பின் மீது அளவற்ற பரிகாசம் மற்றும் நிராகரிப்பு, புதிய தேர்ந்தெடுப்புகளைப் பற்றிய மகிழ்ச்சி, வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனோதிடம் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறாள்.