நம் எண்ணமே செயல் என்ற முதுமொழியைப் போல் நம் உணவே மருந்து என்ற புதுமொழி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உணவில் நல்லது? எது கெட்டது? கடந்த சில ஆண்டுகளாகப் பரம்பரை வியாதிகள் என்று அழைக்கப்பட்ட புற்றுநோய், சர்க்கரை வியாதிகள் இன்று அனைவரையும் பீடிக்கும் நிலை உருவாகியுள்ளது. உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் நம் உடலில் பல விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. இன்றைய அவசர உலகத்தில் வைத்தியர் நுழையாத வீடு இல்லை என்பதே நிஜம். பண்டைய உணவுப் பழக்கங்களை நாம் கைவிட்டது மருந்தகங்களை, மருத்துவமனையை நாம் தேடிச் செல்வதற்கு வழிவகை செய்துவிட்டது. இந்த நிலை மாறாதா? நிச்சயம் மாறும். நம்முடைய அடுப்படியே ஒரு நோய் தீர்க்கும் மருந்தகம் என்று அடித்துச் சொல்கிறார் இந்த நூலின் ஆசிரியர் ச.சிவ&வல்லாளன். வெள்ளைப் பூண்டு, மிளகாய், மஞ்சள், வெங்காயம், எண்ணெய் வகைகள் என நாம் அன்றாடம் அடுப்படியில் பயன்படுத்தும் பொருட்களில் காணப்படும் மருத்துவ குணநலன்கள் என்ன, அவற்றின் பயன்கள் என்ன என்று ஆதாரத்துடன் விளக்குகிறார். இதய நோய் உருவாகும் வாய்ப்பை ஆலிவ் எண்ணெய் குறைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆலிவ் எண்ணெய் நீரழிவு நோயை உருவாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்த உணவு நம் உடலுக்குத் தேவை, எது தேவையற்றது... என்பதை நீங்கள் அறிய வேண்டாமா? பக்கத்தைப் புரட்டுங்கள். அறிந்துகொள்ளுங்கள்