காலத்தின் போக்கில் கண் முன்னே நசிந்து கொண்டிருக்கும் அபத்த வாழ்வின் சகல பக்கங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற போலித்தனங்களை அழுத்தமாகச் சொல்கின்றன ராமலக்ஷ்மியின் கதைகள். முத்துக் கோர்ப்பது போலச் சேர்த்தும், சிதறியும் ஓடிக் கொண்டிருக்கிற, யதார்த்த அன்றாட சம்பவங்கள்தான் இக்கதைகளின் களம். இயலாமையும், ஆதங்கமும் ஒருசேர வாய்த்த, அவலச் சூழலிலும் நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்கிற எளிய மனிதர்களே இக்கதைகளின் மாந்தர்களாக உலவுகின்றனர். தனக்குக் கிடைத்த அனுபவங்களைத் திருகலற்ற இயல்பான மொழியில் மனத்தின் கனிவோடு சொல்லியிருக்கிற ராமலக்ஷ்மி, கதைகளை வாசிக்கிறவருக்குள்ளும் அவ்வுணர்வுகளைத் திரளச் செய்திருக்கிறார்
-பொன்.வாசுதேவன்