மனிதனுக்குத் தன் உடலைப் பற்றிய சிந்தனை தோன்றிய ஆதிகாலத்திலிருந்தே, உடல் உறுப்புகளைப் பற்றியத் தேடலும், புரிதலும் ஏற்படத் தொடங்கியது. பண்டைய மக்கள் தங்கள் உள்ளுணர்வுகள் மூலமும், தேடலின் மூலமும் உடல் இயங்கியலை விளங்க முயன்றார்கள். தமிழகத்தின் சித்த மருத்துவம், வட இந்தியாவின் ஆயுர்வேதம், பாரசீகத்தின் யுனானி மருத்துவம், சீனாவின் அக்குபங்சர்என உலகம் முழுவதும் ஏறக்குறைய ஒரே காலத்தில் மரபுவழி மருத்துவங்கள் தோன்றின. .
ரபுவழி மருத்துவங்களின் தோற்ற காலத்திலிருந்தே உடலியல் பற்றிய தெளிவான பார்வை நம் முன்னோர்களுக்கு இருந்தது. மரபுவழி மருத்துவங்களின் உடலியல் அதன் இயக்கத் தன்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உடற்செயலியலை மட்டுமே உணரவும், பயப்படுத்தவும்செய்தார்கள். பிற்கால மருத்துவங்கள் உடல் அமைப்பியலை புரிந்துகொள்ள முயன்றன. நவீன ஆய்வுகள், அறுத்துப் பார்க்கும் முறைகள் மூலமாக தெளிவான உடல் அமைப்பியலை நவீன அறிவியல் வெளிப்படுத்தியது.
ரபு அறிவியலின் உடற்செயலியல், நவீன சிந்தனைகளின் வழியாக முழுமையை நோக்கி நகர்த்தப்பட்டது. ஆகப்பெரிய ஆராய்ச்சிகள் மனித உடலின் மீது நடந்து கொண்டே இருந்தாலும் இன்னும் பல ரகசியங்களை தனக்குள் தக்க வைத்துக்கொண்டே இருக்கிறது நம் உடல்.
ரபு வழி அறிவியலின் அடிப்படையில் - நவீன ஆய்வுகளின் தொடர்ச்சியாக மனித உடலியலைப் புரிந்து கொள்ள முயல்வதே இக்கட்டுரைகளின் நோக்கம்.
nbsp;