ராம்சந்த்ரா சிங், ஒரு நக்ஸலைட் விசாரணைக் கைதியாக 1970, செப்டம்பர் மாதம் உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஹர்தோய் மாவட்ட சிறைச்சாலைக்குள் நுழைந்தார். இருபது வயதே ஆன அவரது நீண்ட எதிர்பார்ப்புகள் – படிப்பு, அரசியல் மற்றும் காதல் - மிகுந்த வாழ்க்கை, ஆயுள் தண்டனை எனும் எல்லைக்குள் சுருங்கிப்போனது. நிகழ்ந்த சம்பவங்கள் யாவும் அவருடைய மனிதநேயம் மற்றும் கற்பனையை உயிர்த்திருக்க வைத்திருப்பதற்கு எதிராக குவிந்துவிட்டன, ஆனாலும் சிங் தன்னுடைய நண்பர்களின் உதவியால் வெளியே கடத்தப்பட்ட ஒரு ரகசிய நாட்குறிப்பில் மற்றவர்களுடைய உணர்வுகளை, நகைச்சுவையை, ஆழமான சிந்தனையை, குறிப்பாக மொழியை மறு உருவாக்கம் செய்திருக்கிறார். சிங்கின் நாட்குறிப்புகள் சமீபத்திய வரலாறாகவும், தனிமனித சாட்சியமாகவும் ஒற்றை நபர் பதிவாக, புதிய விரிவாக்கத்துடன் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. சிறைவைக்கப்பட்ட ஒவ்வொருவரின் தினசரி வாழ்க்கையைக் கொண்டு முன்னெப்போதும் இல்லாத நெருக்கத்தை அவர்களிடத்தில் நமக்கு உருவாக்கித் தரும் சிங், நாம் அச்சமின்றி கூர்ந்து நோக்க சவால் விடுப்பதோடு, குற்றமும் தண்டனையும் குறித்த நம்முடைய அனுமானங்களையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
No product review yet. Be the first to review this product.