/files/Meinigari 1 page wrapper_350x350.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மெய்நிகரி

(1)
Meinigari
Price: 200.00

In Stock

Book Type
நாவல்
Publisher Year
2020
Number Of Pages
176
Highlights:
  • 2014ஆம் ஆண்டு கிழக்குமுதல் பதிப்பு. தற்போது டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் இரண்டாம் பதிப்பு
  • 2017ஆம் ஆண்டு, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘கவண்’ திரைப்படம் இந்நாவலை அடிப்படையாகக் கொண்டது.
நம் கண்கள் காணும் ஒவ்வொரு காட்சியையும் ஐம்பூதங்களைத் தாண்டி பல்வேறு சக்திகள் தீர்மானிக்கின்றன. அந்த சக்திகளை முழுக்க புரிந்துகொள்வதற்குள் நாம் விற்பனையாகிவிடுகிறோம்.
தலையில் விழுந்தது பறவை எச்சமா அல்லது மழைத்துளியா என்ற கேள்வியின்றி நடைதொடர்வது நம் இயல்பாகிவிட்டது. அந்த நடைப்பாதையில் இந்த நாவல் சின்னதாய் ஓர் இயல்பு மீறல்.
அன்புடன்
கபிலன்வைரமுத்து

3
மெய்நிகரி எனும் தலைப்பே என்னை இந்த புத்தகத்தை வாங்க தூண்டியது
மெய்நிகரி எனும் தலைப்பே என்னை இந்த புத்தகத்தை வாங்க தூண்டியது. அதில் “இதன் கதை தான் கவண் திரைப்படத்தின் மூலக்கதை” என்பதை பார்த்தவுடன் வாசிக்கும் ஆவல் குறைந்துவிட்டது. ஆனால் வாசிக்க வாசிக்க சுவாரசியம் குறையவில்லை. கபிலன் அண்ணா புத்தகங்கள் என்றாலே புதுமைக்கும், தரவுகளும் பஞ்சம் இருக்காது. மெய்நிகரியும் அதற்கு விதி விலக்கல்ல. ஊடகத்தரவுகளை அள்ளி போட்டு உருவாக்கியுள்ளார். ஊடகத்துறை ஆர்வலர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். டெரன்ஸ்பால் - பெனாசிரின் ஊடக ஊடல், தேடல், காதல் இவைகளை மிகவும் அழகாக, தகுந்த அளவாக சொல்லியிருந்தார். நிலா சுந்தரத்தின் கடுப்பேத்துற காமெடி, மானசாவின் பொறுப்பான கமெண்ட்ஸ், பெனாசிரின் தரவு பேச்சுக்கள் என அனைத்துமே ரசிக்கும் வண்ணம் இருந்தது. கதைக்களம் மாடப்புறாவையே சுற்றி வந்தாலும் கபிலன் நமக்கு அவ்வப்போது சென்னையை சுற்றி காண்பிக்கிறார். டெரன்ஸ்பால், பெனாசிர் மெரினாவில் சாப்பிடும் காட்சியில் பசிக்க ஆரம்பித்துவிட்டது. தமிழால் கபிலன் அவர்களும், கபிலன் அவர்களால் தமிழும் வளர, செழிக்க வாழ்த்துக்கள்
Posted by மனோகரன் on Sep 26, 2024
× The product has been added to your shopping cart.