எவ்வகையிலேனும் மனிதர்களுடனான உறவை,பிணைப்பை நாம் உறுதிசெய்து கொண்டே இருத்தல் நலம்.மனிதர்கள் இல்லாத வாழ்க்கையின் வெட்டவெளி சில நேரங்களில் ஆசுவாசம் தருவதாயினும் பல நேரங்களில் அச்சமூட்டக்கூடியது.அந்த மௌனத்தின் பேரிரைச்சல் எத்தகையது என்பது அனுபவிக்கிறவர்களுக்கே தெரியும். ‘போராடி என்ன செய்யப்போகிறீர்கள்!?’ எனும் கேள்வி முளைக்கும் இடங்களிலெல்லாம், “சரி...அப்படி போராடாமல் இருந்து என்ன செய்து விடப்போகிறீர்கள்!?” எனும் கேள்வியை எப்போதும் பதிலாக முன் வைக்கிறேன். பிள்ளைகள் பல நேரங்களில் பெயரிடப்படாத புத்தகமாய் நம்மிடம் வழங்கப்படுகிறார்கள்.அப்படியான தருணங்களில் நாமாக அந்தப் புத்தகங்களுக்கு ஒரு பெயர் சூட்டிக் கொண்டு வாசிக்கத் துவங்கி விடுகிறோம்.நம்மில் எத்தனை பேருக்கு பெயரிடப்படாத புத்தகத்தை முழுவதும் வாசித்துவிட்டு,பெயர் சூட்டும் நிதானமும்,தெளிவும்,பக்குவமும் இருக்கின்றது?
No product review yet. Be the first to review this product.