ஒரு கதையை வாசகன் முழுமையாக வாசிக்கும்படி எழுதிவிட்டாலே எழுத்தாளன் பாதி வெற்றியை அடைந்துவிடுகிறான். முழுவதும் வாசிக்கும்படியான கதையானது, ஓர் அழகிய இளம்பெண் நம்மை வசீகரிப்பது போன்றதாகும். கதையின் நடையில் மெல்லிய நகைச்சுவையும் இருந்துவிட்டால், வயசுப்பெண் ஜடையை முன்னால் தூக்கிப் போட்டுக்கொண்டதுபோல் அது அந்தக் கதையை இன்னும் அழகாக்கிவிடுகிறது. அந்தக் கதைகளில் காதலும் இருந்துவிட்டால், அந்தப் பெண், முன்னால் போட்டிருக்கும் ஜடையில் பூவையும் வைத்ததுபோல் ஆகிவிடுகிறது. இவை மூன்றும் நர்சிம்மின் கதைகளில் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே, நர்சிம்மின் காதல் கதைகளை வெற்றிகரமான கதைகளாக்குகின்றன.
- ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
No product review yet. Be the first to review this product.