என்னைப் பொறுத்தவரையில் ஏ.நஸ்புள்ளாஹ் அற்புதமான ஒரு கவிதை சொல்லி. எந்த நேரத்தில் எந்த விடயத்தை எடுத்து கவிதையை சொல்லத் தொடங்குபவர் என்பதை யூகிக்க முடியாதவர். கனவிற்குள் சம்பவங்களைப் புனைந்து கவிதை சொல்லுவார். நினைவிற்குள் கவிதை சொல்லுவார். ஓவியம் வரைந்து கவிதை சொல்லுவார். புத்தகம் வாசித்துக் கவிதை சொல்லுவார். எழுதிய எழுத்துக்களாக சேர்த்தும் அழித்தும் திருத்தியும் இடம் மாற்றியும் கவிதைகளைச் சொல்லுவார். சொற்கள் அனைத்தும் தாங்களே தங்களுக்குள் உரையாடத் தொடங்கி அவைகளாகவே கவிதைகளை சொல்லுவதாகவும் கவிதை சொல்லுவார்.
No product review yet. Be the first to review this product.