ஜெயலலிதா என்கிற இரும்புப் பெண்மணி, அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமல்லாமல் பல தரப்பு மக்களின் மனங்களிலும் வாழ்ந்த மாபெரும் தலைவர் என்பதை மறுப்பதற்கில்லை. ஜெயலலிதாவின் மரணம் சந்தேகம் மிகுந்ததாகப் பார்க்கப்பட்டதே அவர் எந்த அளவுக்கு மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தார் என்பதைக் காட்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு தலைவரின் மரணம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பு.
ஜெயலலிதாவின் இறுதிக்காலம் எப்படி இருந்தது? அவரது மரணத்தில் என்ன நடந்தது? என்பதையெல்லாம் எதிர்காலத் தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நூலில் எந்த ஒரு இடத்திலும் அரசியல் சார்போ, தனிமனித விறுப்பு வெறுப்போ நிச்சயமாக இருக்காது. நடந்த நிகழ்வுகளை அப்படியே பதிவுசெய்ய வேண்டும், இதை ஒரு வரலாற்றுப் பதிவாகவோ, ஆவணமாகவோ உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
- கூ.பாஸ்கரசந்திரன்
No product review yet. Be the first to review this product.