அம்பிகா குமரனின் ‘காலம்’ கவிதைகள் நம் சமூகப் பொதுப்புத்தியில் தொடர்ந்து வரும் பெண் மீதான அனைத்துப் பொறுப்புத்துறப்பையும் சுட்டிக்காட்டித் தொடர்கிறது. மேலும் காலகாலமான பெண்வரலாற்றின் இடைக்கண்ணியில் இருந்து தன் பிரத்யேக இருப்பைக் கசப்புடன் முன்வைக்கிறது. முக்கியமாக ஆண் - பெண் காதல் என்பது வாக்குறுதியோ பாதுகாப்போ அல்ல, அது ஒரு குடும்ப வன்முறைக்குள் தள்ளும் அழகியல் சுரண்டல் என்கிறார் கவிஞர். அதுவே பலகோடி இந்தியப் பெண்ணினத்தின் உளப்பாங்கில் நிலை கொள்கிறது.
யவனிகா ஸ்ரீராம்
எல்லாப் பிணிகளுடனும் தொடரும் இந்த வாழ்க்கை இரக்கமற்றது. நம்மை எப்போது வேண்டுமானாலும் சவப்பெட்டிக்குள் இழுத்துக்கொண்டு போய்விடும். இது ஒரு மிகப்பெரிய நிதர்சனம் மற்றும் இதுவே வாழ்வுதரும் இறுதிப் பரிசும் கூட. சாயம் பூசாத எழுத்தின் வரம், காலம் மாறாத பூக்கள் ஆகிறது என்ற உயர்ந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்ததாக இருக்கிறது. கவிஞனுக்கு கவிதைகள்தான் நெருக்கமானது. அதில்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் கவிஞர் அம்பிகா குமரனும் வாழத் தலைப்பட்டிருக்கிறார்.
அய்யப்பமாதவன்
No product review yet. Be the first to review this product.