(நாவல்)
சரோஜினி உண்ணித்தான்
தமிழில்: குளச்சல் யூசுப்
பல்வேறு மொழிகள் பேசுகிற, பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட மனிதர்களின் வரிசை மனக்கண்ணில் தங்கி நிற்கிறது. தான் வாழ்கின்ற சூழல்களில்
இருந்துதான் ஒரு படைப்பாளி
தனக்கான கிரியா ஊக்கியைப்
பெற இயலும். எனில், நீண்ட முப்பத்து
மூன்றாண்டுகள் ஒடிசாவில் வாழ்ந்த எனது எழுத்தில்
ஒடியாவின் மண்வாசம் வீசுவதுதான்
இயல்பு. ‘காலமாற்றம்’ என்னும் இந்த நாவலின் கற்பனைக் கதாமாந்தர்களும் ஒடிசா கலாசார பின்னணியுடன்தான் வந்துபோகிறார்கள்.