நமது மக்கள் வனங்களில் தேக்கு, சந்தனமரங்களைத் திருட்டுத்தனமாக வெட்டி எடுக்கிறார்கள். எத்தனையோ மரங்களைச் சதுரிச்சித் தூக்கி வருபவர்களை நான் கண்டிருக்கிறேன். ஏதும் செய்ய முடியாத சூழ்நிலையில் செம்மரக்கட்டை கிலோ ஆயிரம் ரூபாயாம், ஒரு மரம் நூறு கிலோ ஒரு இலட்ச ரூபாயாம். சந்தனமரம் இதைவிட மிக அதிக விலை. பல வனங்களில் சந்தனமரங்களே காணாமல் போய்விட்டன. தற்போது மலைவாசிகள் இப்படியான திருட்டுகளைத் தடுக்க பாடுபடுகிறார்கள்.
ஒரு ஆதிவாசிப் பெண் பாடினாள்,
“காட்டை அழிப்பவனை
காவு கொண்டு போகாதோ...”
தற்போது வனத்தில் திருட்டுகள் குறைந்து வருகின்றன. மலைவாசிகளில் எத்தனையோ பிரிவுகள். தேனி மலைப்பகுதி ஒன்றில் முதுவர் என்ற இனத்தவர் வாழ்கிறார்கள்; பாண்டிய மன்னன் வாரிசுகளாம். கோவலன் கொலையுண்டதும் கண்ணகி கோபத்தில் வாதாட, அதை உணர்ந்த பாண்டிய மன்னன் கீழே விழுந்து உயிர்விட, அரசியும் உயிர்விட, இதைக்கண்ட அரசவையில் உள்ளவர்கள் வெளியேற, மன்னன் - அரசி உடல்களை ஆணும் பெண்ணுமாகத் தூக்கி வந்தவர்களாம். ‘அன்னை கண்ணகி தாயுள்ளம் கொண்டவள்... மதுரையைத் தீயில் அழிய ஆணையிடவில்லை’ என உறுதியுடன் கூறுகின்றனர்.
No product review yet. Be the first to review this product.