எல்லா இடுக்குகளிலிருந்தும் நசுங்கி வெளியேறி நடுங்கா அறத் தெறிப்பில் குரலெழுப்புகின்றன, இவரது ஆக்காட்டிச் சொற்கள். கோடி கோடிப் பறவைகள் கூடிப் பறப்பதற்கான ஆதிப் பெருவெளிதான் வானத்துப் பெருஞ்சுழியம். அதன் உயர உயரத்திலிருந்து இறங்குகிற பிரபஞ்சப் பேரொளியின் இறக்கைகள் கட்டிய பறவைகளாகவே இவரது சொற்கள், அனைத்துக் கவிதைகளிலும்...
- பாவலர் அறிவுமதி
ரூபனுடைய சமூகப் பார்வையும், உலக இலக்கியத்தில் அவர் கொண்டுள்ள ஈடுபாடும் அவருடையை படைப்புகளுக்குச் செழுமை சேர்க்கின்றன. இதன் செல்வாக்கை அவருடைய கவிதைகளில் காணலாம். சிக்கலற்ற மொழிநடையைக் கவித்துவமாகக் கையாளும் அவருடைய ஆக்கத்திறனுக்கு எடுத்துக்காட்டுகளாகவும் விளங்குகின்றன.
- பேராசிரியர் ந. சண்முகரட்ணம்
No product review yet. Be the first to review this product.