இலங்கைத் தீவில், போருக்குப் பிந்திய இன்றைய சூழலில் பல்லின சமூகங்களில் இருந்து அல்லது பல்பண்பாடுகளில் இருந்து ஒருமிக்கும் சிந்தனைகளும் அதற்கான நிகழ்த்துகைகளுமே உடனடியாகத் தேவைப்படுகின்றன. கடந்த காலங்களில் சமூகங்களுக்கும் சமூகங்களுக்கும், பண்பாடுகளுக்கும் பண்பாடுகளுக்கும் சிவில் நிறுவனங்களுக்கும் சிவில் நிறுவனங்களுக்கும் இடையில் உரையாடல் எதுவும் நிகழவேயில்லை. முரண்பாடுகள் கூர்மையடைவதை தணிப்பதற்கும் மோதுகைகளை தவிர்ப்பதற்கும் உரையாடல் இன்றியமையாதது. மனித நேயம், கருணை, ஜீவகாருண்யம் போன்ற அறங்கள் முகிழ்க்கும் இக்கதைகள் அவ்வுரையாடலுக்கு உதவக்கூடுமென்ற அவாவினால் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
No product review yet. Be the first to review this product.