இந்தியா, பல மொழிகள் பேசப்படும் ஒரு கூட்டுச் சமூகம். இந்திய மொழிகளின் சென்ஸஸ் கணக்குப்படி, இந்தியாவில் பேசப்படும் ‘தாய்மொழி’களின் எண்ணிக்கை சுமார் 10,400. பல மொழிகள் ஒரு குறிப்பிட்ட மொழியின் திரிபு என்பதாலும், ஒரு மொழியே மீசை வைத்துக்கொண்டும், மச்சம் ஒட்டிக்கொண்டும் பல மாறுவேடங்கள் போடுவதாலும், இந்தத் தொகை கணிசமாகச் சுருங்கி கடைசியில், முக்கியமான மொழிகள் 114 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மொழிகளின் அடிப்படையில்தான், அவற்றைச் சார்ந்த திரைப்பட உலகங்கள் இயங்குகின்றன. கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தியாவில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே, 40க்கும் மேற்பட்ட திரைப்பட உலகங்களும் இங்கே இருக்கின்றன. அதிலுமு் மிக முக்கியமான இந்தியாவின் 33 திரைப்பட உலகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
No product review yet. Be the first to review this product.